• Jul 25 2025

ஹேக் செய்யப்பட்ட கார்த்தியின் Facebook அக்கவுண்ட்...அவரே வெளியிட்ட பரபரப்புத் தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. கடந்த மாத இறுதியில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஆனது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இன்றும் பெற்று வருகின்றது. 


இதனையடுத்து அடுத்ததாக கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது. இப்படமும் சிறந்த வரவேற்பை வாரிக் குவித்து வருகின்றது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' எனும் திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய பூஜையானது அண்மையில் தான் போடப்பட்டது.


இந்நிலையில் தற்போது ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் கார்த்தியின் Facebook பக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கார்த்தியின் இந்த பதிவானது ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. மேலும், விரைவில் தன்னுடைய Facebook கணக்கை மீட்டு எடுத்துவிடுவேன் என்றும் கார்த்தி அப்பதிவில் தெரிவித்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Advertisement

Advertisement