• Jul 25 2025

மகாநதி சீரியலில் இணைந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் கதாநாயகன்- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மதிய நேரத்தில் காலேஜ் காதலை மையப்படுத்தி ஓடிக் கொண்டிருப்பதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

800 எப்பிஷோட்டுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் வெண்ணிலாவும் சூர்யாவும் அண்மையில தான் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் சூர்யாவின் பெரியம்மாவின் சூழ்ச்சியால் வெண்ணிலா இப்போது ஜெயிலுக்குள் இருக்கின்றார்.


இதனால் சூர்யா எப்படி வெண்ணிலாவைக் காப்பாற்றப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.இந்த சீரியலில் விரைவில் கிளைமாக்ஸ் எபிசோடும் ஒளிபரப்பாக இருக்கிறது.

படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக ஏற்கனவே குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். ஹீரோயினாக நடித்த பிரியங்கா ஷூட்டிங்கை முடித்துவிட்டு அவரது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியல் ஹீரோ நடிகர் சுவாமிநாதன் அடுத்து ஒரு சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.


மகாநதி சீரியலில் தான் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறாராம். விரைவில் அவர் நடித்த காட்சிகள் ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement