• Jul 24 2025

முல்லையின் அம்மாவை வீட்டை விட்டு துரத்திய கதிர்- கடன் கேட்டுத் திரியும் ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் உறைந்த கண்ணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தனமும் மூர்த்தியும் வீட்டை விட்டு கிளம்பவுள்ளதால் கதிரும் முல்லையும் எதற்காக வீட்டை விட்டுப் போறீங்க எனக் கேட்கின்றனர். அவர்கள் உண்மையைச் சொல்ல மறுக்க முல்லை பாண்டியனை வாங்கி விட்டு தனத்தின் கையை தன் மீது வைத்து கண்டிப்பா நீங்க இந்த வீட்டை விட்டுப் போகக் கூடாது என்று கூறுகின்றார்.


முல்லையைத் தொடர்ந்து கதிரும் மூர்த்தியிடம் சத்தியம் வாங்குகின்றார். பின்னர் மூல்லை தனது அம்மாவிடம் சென்று அக்காவுக்கு ஏதாவது சொன்னியா என்று கேட்க அவர் மறுத்து விடுகின்றார். பின்னர் கதிரும் வற்புறுத்திக் கேட்ட ஆமாம் நான் தான் சொன்னேன்.இரண்டு புள்ளைத் தாச்சி பொண்ணுங்க ஒரு வீட்டில இருக்கக் கூடாது என்பதற்காக போகச் சொன்னேன் என்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கதிர் அவங்க இங்க தான் இருப்பாங்க. எங்கையும் போக மாட்டாங்க என்று சொல்ல பதிலுக்கு முல்லையும் திட்டுகின்றார். பின்னர் நீ வீட்டை விட்டு போ என்று சொல்ல அவரும் பாஃக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகின்றார். அப்போது தனம் ஏன் சித்தி கிளம்புறீங்க என்று கேட்டதற்கு தனத்தை திட்டுகின்றார்.


இப்போ உனக்கு சந்தோஷமா நீயும் உன் புருஷனும் நாடகம் போட்டு ஏமாத்திட்டீங்களா என்று திட்ட கதிர் வந்து கிளம்பினால் போக வேண்டியது தானே எதுக்கு அவங்களோட தேவையில்லாத கதை என்று சொல்ல முல்லையின்  அம்மா போய் விடுகின்றார்.தொடர்ந்து ஐஸ்வர்யாவும் கண்ணனும் அவர்கள் வீட்டில் இருக்கும் போது ஐஸ்வர்யாவின் சித்தி வந்து அதிரசம் கொடுக்கின்றார்.

அதனை வாங்கி வைத்து விட்டு ஐஸ்வர்யா அவரது சித்தியிடம் பணம் கடனாகக் கேட்கின்றார். அவர் தன்னிடம் இல்லை என்று சொல்ல யாரிடமாவது வாங்கித் தா என சொல்ல கண்ணன் அதிர்ச்சியடைகின்றான். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement