• Jul 24 2025

நந்தினியின் கழுத்தைப் பிடித்து நெரித்த கதிர்... கொலை முயற்சியா..? பதற்றத்தில் ஓடி வந்த குடும்பத்தினர்... விறுவிறுப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் சக்திக்கு கால் பண்ணிய ஜனனி "முக்கியமான விஷயத்திற்காக தான் நான் கால் பண்ணினேன், இங்க பெரிய பிரச்சினை போய்ட்டு இருக்கு நீ கிளம்பி வந்திடு" எனக் கூறுகின்றார்.


மறுபுறம் நந்தினி "மனுஷங்களை மதிக்கத் தெரியாதவன் அவன், அவன் பண்ணுற பாவத்திற்கு எல்லாம் எவ்வளவு அனுபவிக்கப் போறான் பாருங்க" எனக் கூறி அழுகின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த கதிர் "என்னடி அப்பிடி நான் அனுபவிக்கப் போறேன்" எனக் கேட்டு நந்தினியின் கழுத்தைப் பிடித்து நெரிக்கின்றார். சுற்றி நின்ற அனைவரும் ஓடி சென்று அவரை தடுத்து நிறுத்துகின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகுது என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement