• Jul 25 2025

பெரியப்பாவின் மாஸ்டர் பிளானை தடுத்த கயல்.திருதிருவென முழித்த பெரியம்மா...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில்  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்தவகையில் இதில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றுமொரு சீரியல் தான் கயல். தந்தை இல்லாமல் தன்னுடைய குடும்பத்தை  வழிநடத்தும் பெண்ணின் போராட்டத்தையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கயலின் பெரியப்பா தன்னுடைய மகன் பவித்ரா என்னும் பெண்ணை காதலித்து ஏமாற்றியதோடு அவளின் கர்ப்பத்தை கலைப்பதற்காகவும் பவித்ராவுக்கு தெரியாமல் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

கயல் வேலை பார்க்கும் ஹாஸ்பிட்டல் என்பதால் கயலுக்கு பெரியப்பாவின் முழுக்குடும்பமும் பவித்ராவுடன் எதற்கு வந்திருக்கிறாங்க என்று சந்தேகம் எழுந்திருந்தது. 

பின் அதைக் கண்டு கரு கலைப்பதை தடுக்கின்றார் கயல்.இந்த நேரம் கயலின் பெரியப்பா தன் மகனின் காதலி முன் அந்த பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணுது போல தன்னுடைய மகனை திட்டுகின்றார். 

இதனை கண்டு பெரியப்பாவை பேசுகின்றார் கயல்.இதன் பின் அழுது கொண்டே அந்த பெண்...“ எங்களை சேர்த்து வைக்கிறதாக சொன்னீங்களே...” என அழுது கொண்டே கேட்க... “நீ நினைக்கிறது ஒரு போது நடக்காது ..” என பெரியப்பா கத்துகின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.


Advertisement

Advertisement