• Jul 24 2025

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனுமா... எனக்கு இந்த சினிமாவே வேணாம்... அதிரடியாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் பலரது மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். மேலும் சிவகார்த்திகேயனின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த அவர் 'ரஜினி முருகன், ரெமோ' ஆகிய படங்களில் செம்ம க்யூட்டாக நடித்திருந்தார். 


அதனைத் தொடர்ந்து விக்ரம், விஜய், விஷால் எனப் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். தமிழைத் தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடுவது பற்றியும், அங்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ். 

அதாவது திரைத்துறையில் எப்போதுமே பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அடிக்கடி வெளியாவது வழக்கமாக உள்ளது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் இதுகுறித்து புகார் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றார்கள்.

அந்தவகையில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என இயக்குநர்கள், தயரிப்பாளர்கள், நடிகர்கள் அழைப்பதாக நடிகைகள் கூறிய பல குற்றச்சாட்டுகளை இந்த திரையுலகம் கண்களினூடாகப் பார்த்துள்ளது. 


இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "சில நடிகைகள் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி என்னிடம் அடிக்கடி நேரடியாக கூறியுள்ளனர். ஆனால், நான் இப்படியான அனுபவங்களை இதுவரைக்கும் சந்தித்தது கிடையாது. என்னை யாரும் பாலியல் தொந்தரவு செய்தது கிடையாது" என அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.

மேலும் "என்னிடம் யாரும் நடிப்பதற்கு வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி தவறான கண்ணோட்டத்தில் அணுகினால் அல்லது பாலியல் தொல்லைக் கொடுத்தால், அந்த சான்ஸை வேண்டாம் என கூறி விட்டு விலகிவிடுவேன். அதுமட்டும் இல்லை சினிமாவே வேண்டாம் என சொல்லிவிட்டு சினிமாவில் இருந்து விலகியும் விடுவேன்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு அப்படி ஏதாவது தவறு நடந்தால் சினிமாவிற்குப் பதிலாக வேறு எதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்வேன்" என ஓப்பனாக பேசியுள்ளார். இவ்வாறாக பாலியல் தொல்லை கொடுத்தால் சினிமாவில் இருந்து விலகுவேன் என கீர்த்தி சுரேஷ் கூறிய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement