• Jul 24 2025

திடீரென பாலிவூட் நடிகை ஜான்வி கபூரைச் சந்தித்த கீர்த்தி சுரேஷ்- ஓ இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதும் யாவரும் அறிந்ததே. இவர் தற்பொழுது தனது தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூரின் தயாரிப்பில் மிலி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தினை தேசிய விருது பெற்ற மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளதோடு இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜாவித் அக்தர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.அத்திரைப்படம் 2022 நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


2019 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டு வருகிறார்.

 இச்சூழலில் நடிகை கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement