• Jul 25 2025

கவர்ச்சிக்கு தாவினாரா கீர்த்தி சுரேஷ்; வைரலாகும் மாடர்ன் உடையில் கலக்கிய புகைப்படங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையான இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது தமிழ் படங்கள் தான்.

கடந்த சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தாலும், கீர்த்தியின் மார்க்கெட்டும் அவருக்கான மவுசும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் குறையவில்லை.

இவர் நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் அவர் கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஜிகுஜிகுவென மின்னும் மாடர்ன் உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து  புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement