• Jul 25 2025

கீர்த்தி சுரேஷின் வருங்காலக் கணவர் விஜய் போலவா..? இதோ அவரே கூறிய பதில்.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் தன்னுடைய அழகினாலும், சிறந்த நடிப்பின் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கட்டிப் போட்ட ஒருவரே நடிகை கீர்த்தி சுரேஷ். ஏனைய சினிமா நடிகைகளைப் போலவே  இவரும் சமீபகாலமாக பல கிசுகிசுக்களில் சிக்கி வருகின்றார்.


அந்தவகையில் விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையே தவறான உறவு இருப்பது போல் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் காரணமாகத்தான் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.


அதுமட்டுமல்லாது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 13 வருட பள்ளி பருவ காதலரைத் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் எனவும் ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால், அந்த செய்தியை ஓவர்டேக் செய்யும் விதமாக கீர்த்தி சுரேஷ் விஜய்யின் நண்பர் சஞ்சீவின் வீட்டின் மேலே வசித்து வருவதாக கூறப்பட்டது. அத்தோடு விஜய்யின் வீட்டிற்கு அருகே தான் சஞ்சீவ் வீடு இருக்கிறது எனவும் ஒரு சிலர் கூறி இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்க்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையே காதல் உறவு இருக்கிறது என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் ஒரு தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இவை யாவும் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.


இவ்வாறான பல குழப்பங்களுக்கு மத்தியில், கீர்த்தி சுரேஷ் முன்பு கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் தனக்கு வருங்கால கணவர் விஜய் போல் இருக்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் கூறிய வீடியோ ஒன்றினை தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement