• Jul 26 2025

கீர்த்தி சுரேஷின் உண்மைக் காதலர் இவர்தானா..? இதோ திருமணத்தில் நெருக்கமாக எடுத்த புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தைத் தற்போது பெற்றிருக்கின்றார்.


இருப்பினும் சமீபகாலமாக சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமையினால், கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்து வந்திருந்தன. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.


அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் விஜய் - கீர்த்தி சுரேஷ் பற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.

அதாவது பள்ளிப்பருவ காலத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ், ஒருவரை 13 வருடமாக காதலித்து வருவதாகவும் அவரைத்தான் திருமணம் செய்ய இருப்பதாகவும், இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றார். இதில் திருமண தம்பதியுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுக்கும் பொழுது அவரின் பக்கத்தில் ஆண் நபர் ஒருவர் நெருக்கமாக நிற்கிறார்.


இதை கவனித்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா..? ஒரு வேலை இவர் தான் கீர்த்தியின் உண்மையான காதலராக இருப்பாரோ என்று பல கோணத்தில் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டனர். இதனால் இந்த புகைப்படம் ஆனது தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement