• Jul 26 2025

விபத்தில் சிக்கிய சில நாட்களிலேயே புத்தம் புதிய பென்ஸ் காரை வாங்கிய கேஜிஎப் நடிகர்-வைரல் ஃபோட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூரின் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகிய திரைப்படம் தான் தான் கேஜிஎப். இரண்டு பாகங்களாக உருவாகி வெளியான இப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.


இப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்ததோடு கதாநாயகியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.இவர்களுடன் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


 இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.இந்த நிலையில் இப்படத்தில் நடித்த பி.எஸ்.அவினாஷ்,தற்பொழுது புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார். 


 கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இவரது பென்ஸ் காரில் லாரி மோதியது. விபத்துக்குள்ளாகாமல் அவினாஷ்  தப்பித்தார். ஆனால் அவரது கார்ன் டேமேஜ் ஆனது. இந்நிலையில்தான் இவர் தற்போது X5 40i எனும் பிஎம்டபுள்யூ காரை வாங்கியுள்ளதாக கூறப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement