• Jul 25 2025

KGF யாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம்...இயக்குநர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

KGF மற்றும் KGF 2 படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ்.

KGF முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து எதிர்பார்த்ததை விடம் மாபெரும் வெற்றிபெற்றது.

வசூலில் தென்னிந்திய அளவில் பாகுபலி2விற்கு அடுத்த இடத்தை பிடித்து வசூல் சாதனையை செய்தது.

இந்நிலையில், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு வெற்றியை கொடுத்த யாஷ் ஏன் ஒரு வருடம் ஆகியும் அடுத்த படத்தை கமிட் செய்யாமல் இருக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் ராமாயணம் கதையில் ராவணனாக யாஷ் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என அவரே மறுப்பு தெரிவித்தார்.

KGF 2 படத்திற்கு பிறகு இதுவரை அவர் தன்னுடைய அடுத்த படத்தை கமிட் செய்யவில்லை என்பதே தற்போதைய நிலவரம். ஒரு வேலை மீண்டும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவே அவர் காத்திருக்கிறாரோ என பலரும் சந்தேகிக்கின்றனர்.

அது ஒரு வேலை கே ஜி எஃப் 3யாக கூட இருக்கலாம். எதுவாக இருப்பினும் பொறுத்திருந்து பார்ப்போம் யாஷுடைய அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்று.

Advertisement

Advertisement