• Jul 24 2025

திருமண நாளையொட்டி தன் வாழ்வில் முக்கியமான 4புகைப்படங்களைப் பகிர்ந்து சுந்தர் சிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாப் பிரபலன்களான சுந்தர்சியும் குஷ்பூவும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தயாரிப்பிலும் மற்றொருவர் நடிப்பிலும் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்றைய தினம் சுந்தர்.சி-குஷ்பூ தம்பதியினர் தங்களுடைய 23-ஆவது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி இன்ஸ்டாகிராமில் தன் வாழ்வில் மறக்க முடியாத 4 புகைப்படங்களை குஷ்பூ பதிவிட்டுள்ளார். அதில் தான் தன்னுடைய வாழ்க்கையே அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


அந்தவகையில் முதலில் நடிகையாகவும் இயக்குநராகவும் இருந்த காலத்தில் எடுத்த புகைப்படம், இருவரும் காதலிக்கும்போது எடுத்த புகைப்படம், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் என 4 புகைப்படங்கள் இதில் காணப்படுகின்றன. 


மேலும் இப்பதிவில் தன்னை தானாகவே இருக்க உதவிய கணவர் சுந்தர் சிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது தங்களுடைய வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை என்றும், தங்களின் சிறப்பான பயணம் தொடர்ந்து வருவதாகவும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.


அத்தோடு "சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டது தனக்கு கிடைத்த வரம் என்றும் தன்னுடன் எப்போதும் இருக்கும் சுந்தர் சிக்கு நன்றி என்றும்" இப்பதிவின் மூலாமாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement