• Jul 25 2025

விமான நிலையத்தில் குஷ்பூவிற்கு நேர்ந்த கசப்பான அனுபவம்.. வேதனையோடு அவரே கூறிய விடயம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்த ஒருவரே நடிகை குஷ்பூ. இவர் தற்போது சினிமாவைத் தாண்டி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் பாஜக-வில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ, அக்கட்சியின் உடைய தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். 


இந்நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பூவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் கட்டுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனைத் தெரிவித்திருந்தார்.


இதனைத் தொடர்ந்து இவர் தற்போது சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தனது ட்விட்டரின் வாயிலாக பகிர்ந்து கொண்டு உள்ளார். 


அதாவது ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பெயரை டேக் செய்து அவர் வெளியிட்டு உள்ள அந்த ட்விட்டர் செய்தியில், முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்து செல்ல அடிப்படையான ஒரு சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை? எனக் கவலையுடன் கேட்டுள்ளார். 

அத்தோடு "வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியை கடனாக பெற்று வரும் வரை, சென்னை விமான நிலையத்தில் அரை மணிநேரம் காயத்துடன் காத்திருந்தேன். இதனை விட நல்ல முறையில் நீங்கள் சேவை செய்ய முடியும் என என்னால் உறுதி கூற முடியும்" எனவும் அவர் தெரிவித்து உள்ளார். 


இருப்பினும் நடிகை குஷ்பூவுக்கு ஏற்பட்ட அவதிக்கு, ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் "உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கான நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்து செல்லப்படும்" என ட்விட்டரின் வாயிலாகப் பதிலளித்து உள்ளது.


Advertisement

Advertisement