• Jul 26 2025

இயக்குநர் சொன்ன வார்த்தைக்காக வெட்டவெளியிலேயே ஆடையை மாற்றிய குஷ்பு… என்ன நடந்தது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


குஷ்பு ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார். அவருக்கு கோயில் கட்டிய கதை எல்லாம் இங்கே நிலவியது உண்டு. குஷ்பு தொடக்கத்தில் பல ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பின் “ஜானு” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்த குஷ்பு, தமிழில், “தர்மத்தின் தலைவன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “வருஷம் 16”, “வெற்றிவிழா” ஆகிய பல திரைப்படங்களில் நடித்த குஷ்பு, தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்த நடிகையாக உயர்ந்தார்.


இந்த நிலையில் “எட்டுப்பட்டி ராசா” என்ற திரைப்படத்தில் குஷ்பு நடித்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் கஸ்தூரி ராஜா பகிர்ந்துகொண்டுள்ளார்.


அதாவது அத்திரைப்படத்திற்காக ஒரு காட்சியை பொட்டல் காட்டில் படமாக்கி வந்தார்களாம். அப்போது குஷ்பு வேறு ஒரு ஆடையை அணிந்து வரவேண்டும், அப்போதுதான் மீதமுள்ள காட்சியை படமாக்க முடியும் என இயக்குனர் கேமரா மேனிடம் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் அந்த பொட்டல் காட்டில் மறைவாக துணி மாற்ற ஒரு மரம் கூட இல்லையாம்.

அது மாலை நேரம் என்பதால் சூரியன் மறைந்துகொண்டிருந்தது. சில மணி நேரங்களிலேயே இருள் வந்துவிடும். குஷ்பு தங்கியிருக்கும் அறை மிக தூரமாக இருப்பதால் அங்கு சென்று ஆடையை மாற்றி வந்தால் நேரமாகிவிடும் என்பதால் அந்த காட்சி படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட குஷ்பு, “நான் இங்கேயே உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்” என கூறினாராம். 


அதற்கு கஸ்தூரி ராஜா, “இங்க மறைவாக ஆடை மாற்ற ஒரு மரம் கூட கிடையாது. பின்பு எப்படி உன்னால் ஆடையை மாற்றமுடியும்” என கூறியிருக்கிறார்.ஆனால் குஷ்புவோ விடாபிடியாக “நான் மாற்றிவிட்டு வருகிறேன்” என கூறிவிட்டு தனது உதவியாளர்கள் சிலரை அழைத்து நான்கு பக்கமும் துணியை பிடித்துக்கொண்டு தன்னை மறைத்தப்படி நிற்கச் சொல்லிவிட்டு அந்த மறைவான இடத்தில் ஆடையை மாற்றிக்கொண்டு வந்துவிட்டாராம். அதன் பின் மீதமுள்ள காட்சியை சூரியன் மறைவதற்குள் அன்றே படமாக்கி முடித்துவிட்டார்களாம்.


Advertisement

Advertisement