• Jul 25 2025

தன்னுடைய பழைய நண்பரைச் சந்தித்த குஷ்பு- அடுத்த சுந்தர்.சி இவர் தானா?- கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இணைந்து பணியாற்றிய குஷ்பு அதன்பின் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. 

 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்துகொண்டார். மும்பையை சேர்ந்த இவர், திருமணத்திற்கு பின் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.


இருவருக்கும் இருமகள்கள் உள்ள நிலையில் மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.அmந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் குஷ்பு ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. படத்தில் நீளத்தை கருத்தில் கொண்டு குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தரப்பு விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் குஷ்பு தன்னுடைய பழைய நண்பரான திருச்சி சிவாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த சுந்தர் சி இவர் தானா என கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement