• Jul 24 2025

லியோ பட வில்லன் நடிகருடன் குஷ்பு.. இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். கடைசியாக இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்த படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து அங்கையற்கண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார். விஜய்யின் வாரிசு படத்திலும் குஷ்பு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுந்தர்.C யை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு, நடிகை குஷ்புவை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்தது.

இந்நிலையில் நடிகை குஷ்பு, நடிகர் ஜாக்கி ஷெராப் உடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'என்னுடைய ஹீரோ' என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். 

ஜாக்கி ஷெராப், விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்தவர். மேலும் தற்போது ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்படத்தக்கது.

Advertisement

Advertisement