• Jul 25 2025

கடத்திட்டு போய் தான் கல்யாணமா? -பிக்பாஸ் அமீர் மற்றும் பாவனியின் திருமணம் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல்யமானவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறியுள்ளதோடு விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது. அத்தோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இருவரும் இன்றைய தினம் ஜோடியாக லைஃவ்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அதில் அவர்கள் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அமீர் கூறியதாவது பிக்பாஸ் வீட்டுக்குள்ள நான் போய் ஒரு வருடம் முடிந்து விட்டது. அதே போல பாவனி போய் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு போயிட்டு வந்ததற்கு பிறகு தான் எனது வாழ்க்கையே மாறியுள்ளது.


பிக்பாஸ் வீட்டுக்கு போனதற்கு பிறகு தான் எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கு. நிறைய வாய்ப்புக்கள் என்னைத் தேடி வருது பாவனி கிடைச்சிருக்கிறாங்க. எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியினால் அமைஞ்சது என்று தான் கூற வேண்டும் உங்கள் ஆதரவு இல்லை என்றால் எங்களால் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்திருக்க முடியாது. நடிகராக மட்டுமல்லாது நடன இயக்குநராகவும் படங்களில் பணியாற்றி வருகின்றேன் விரைவில் இது குறித்து கூறுவேன் என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய பாவனி நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை இப்படி ஒரு லவ் மக்களிடம் இருந்து கிடைக்கும் என்று உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்றும் தெரிவித்தார். அத்தோடு எப்போது திருமணம் என்று கேட்டபோது அதற்கு அமீர்தான் சொல்லனும். அவர் ஓகே சொல்லாவிட்டால் கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான் என்று கூறினார். அதற்கு அமீர் கண்டிப்பாக விரைவில் நான் செட்டில் ஆனதும் திருமணம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். இவர்களின் இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம். 

Advertisement

Advertisement