• Jul 25 2025

யாருமில்லா ரூமில் கிஸ் பண்ணா தான் வாய்ப்பு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட நபர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் VJ தீபிகா. அவர் ஏற்கனவே அந்த தொடரில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து எல்லோரும் தனித்தனியாக சென்றுவிட்டனர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஐஸ்வர்யாதற்போது VJ தீபிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிக்க வந்த புதிதில் சந்தித்த casting couch பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் ரோல் என சொல்லி ஆடிஷனுக்கு அழைத்தார்கள். அங்கு போனால் ஒரு ரூமில் ஒரு நபர் தவிர வேறு யாருமே இல்லை. அந்த ரோலுக்கு படத்தில் முத்த காட்சி இருக்கிறது, அதை தற்போது செய்து காட்ட வேண்டும் என கேட்டார்.அப்படி ஒரு ரோலில் நடிக்கமாட்டேன் என கூறி, வேறு ரோல் இருந்தால் சொல்லுங்க என கேட்டபோது.. 'இதற்க்கு முன் 8 பெண்கள் வந்து கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாது' என கூறினார்.

இப்படி வெளிப்படையாக பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறார்கள் என VJ தீபிகா கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement