• Jul 26 2025

படுஜோராக நடந்த கே.எல். ராகுல் - அதியா திருமணம்.. வைரலாகும் புகைப்படம்...குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கை அணிக்கு எதிரான தொடரை முடித்த கையுடன் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தற்போது ஆடி வருகிறது.இவ்வாறுஇருக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன கே எல் ராகுல், நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருந்தார்.


பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான் அதியா ஷெட்டியுடன் கே எல் ராகுலுக்கு திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது.முன்னதாக, ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் காதலித்து வருவது பற்றி அவர்களே சில சமூக வலைத்தள பதிவில் அதிகாரபூர்வமாக குறிப்பிட்டிருந்தனர். எனினும் இதே போல, பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிந்தும் வந்தனர். அவ்வப்போது இது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து வந்தனர்.


எனினும் இதற்கு மத்தியில், கடந்த சில மாதங்களாக கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நடைபெறும் என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது. இதற்கு சுனில் ஷெட்டி கூட விரைவில் திருமணம் நடைபெறும் என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.மேலும்  அப்படி இருக்கையில், நியூசிலாந்து தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியது அவருடைய திருமணத்திற்காக தான் என்றும் தகவல்கள் பரவி வந்தது.


இவ்வாறுஇருக்கையில், கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்தது  உறுதியாகியுள்ளது. அதியாவின் தந்தை சுனில் ஷெட்டி மற்றும் சகோதரர் அகான் ஷெட்டி ஆகியோர் ராகுல் - அதியா திருமணம் நடந்து முடிந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். அத்தோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இனிப்பு வழங்கி இது பற்றி அவர்கள் அறிவித்திருந்தனர்.


தான் அதிகாரபூர்வமாக மாமனார் ஆகி விட்டதாகவும், சிறந்த முறையில் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்ததாகவும் பத்திரிகையாளர்கள் முன்பு சுனில் ஷெட்டி கூறி உள்ளார். அதே போல, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கே எல் ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் இது தவிர சில கிரிக்கெட் பிரபலங்களும் ராகுல் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.


இவ்வாறுஇருக்கையில், தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை அதியா ஷெட்டி பகிர்ந்துள்ளார். திருமண கோலத்தில் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், திருமணம் குறித்த எமோஷனல் கருத்துக்களையும் தனது கேப்ஷனில் அதியா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.


கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement