• Jul 27 2025

படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்த கோமாளி பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த நடிகைகள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் சம்யுக்தா ஹெக்டே.

இவர் தமிழில் மன்மதலீலை கோமாளி உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டது.

இதில் அவருக்கு கணுக்கால் மற்றும் முழங்காலில் படுகாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement