• Jul 25 2025

நிஷாவிற்கு பூ கொடுத்து கன்னத்தில் கிள்ளிய பிரபல நடிகர்... வயிற்றெரிச்சலில் மைனா... வெளியானது KPY ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கவர்ந்த பல நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்து வருகின்ற ஒரு சேனல் தான் விஜய் டிவி. அதுவும் இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களிற்கு என்று ஒரு கூட்டமே உண்டு. 


அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் கலக்கப் போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சித்தார்த்தின் 'டக்கர்' படக்குழுவினர் வருகை தந்துள்ளனர். அங்கு வந்த சித்தார்த் தொகுப்பாளர் அறந்தாங்கி நிஷாவிற்கு பூ கொடுத்து அவரின் கன்னத்தில் கிள்ளுகின்றார். 


இதனைப் பார்த்த மைனா நந்தினி எங்களுக்கொரு மாதிரி வயிற்றெரிச்சலாக உள்ளது எனக் கூறுகின்றார். மேலும் ரேஷ்மா என்னால முடியல எனக் கூறுகின்றார். இவ்வாறாக ரொம்பவும் கலகலப்பாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement