• Jul 24 2025

'குக்வித் கோமாளி' பவித்திரா லட்சுமி வீட்டில் நடந்த சோகம்... கண்ணீரோடு பதிவிட்ட நடிகை... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் ஷோவான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையிலும் ஒரு  சில படங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் நாய் சேகர் உள்ளிட்ட படங்களை குறிப்பிட முடியும். 


இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி கண்ணீருடன் துயரமான ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதாவது ஒரு வாரத்திற்கு முன்பு தனது அம்மா மரணமடைந்தது பற்றி தான் பவித்ரா லட்சுமி எமோஷ்னலாக இப்பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார்.


அந்தவகையில் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருந்து வந்த அவர் தற்போது உயிரிழந்து இருக்கிறார். இதுவரை காலமும் தனியாக இருந்து தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டம் பற்றி அதில் அவர் பதிவிட்டிருக்கின்றார். இப்பதிவானது பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது. இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆறுதலைக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement