• Jul 26 2025

காதல் மனைவிக்காக அடையாரில் பங்களா வாங்கும் குக்வித்கோமாளி புகழ்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிகழ்ச்சி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா  தொற்று  காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்டிரெஸ் பஸ்டராக இருந்தது. எனினும் இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டிலை தட்டிச் சென்றார். அதேபோல் இந்த ஆண்டு சமீபத்தில் முடிவடைந்த மூன்றாவது சீசனில் நடிகை ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார். மேலும் இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்நிகழ்ச்சி இந்த அளவுக்கு பாப்புலர் ஆவதற்கு காரணம் அதில் உள்ள கோமாளிகள் தான்.

அதிலும் இந்நிகழ்ச்சி மூலம் மிகவும் பேமஸ் ஆனது புகழ் தான். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், இந்நிகழ்ச்சிக்காக அந்த வாய்ப்பை புறக்கணித்துவிட்டார்  புகழ். அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. இதன்மூலம் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கிவிட்டன.

எனினும் தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் புகழ். இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. மேலும் அதில் மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் புகழ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பென்சியா என்கிற பெண்ணை காதலித்து வருகிறார் புகழ்.இவர்கள் இருவருக்கும் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திங்கட்கிழமை திருமணம் நடைபெறும் நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு காமெடி வீடியோ ஒன்றை செய்துள்ளனர்.அதில் அடையாரில் உனக்கு ஒரு பங்களா வாங்கித் தாரேன்.நான் ராஜா நீ மகாராணி என காமெடியாக செய்கின்றனர்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement