• Jul 24 2025

கண்ணீர் வரவழைக்கும் பதிவை இட்ட குக்வித்கோமாளி புகழ்...அப்பிடி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியவர்.அத்தோடு  ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.

அத்தோடு  இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இணைந்து இவர் செய்யும் சேட்டைகள் வேற லெவல் ரகம். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி சீசனாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பட வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிகழ்ச்சி அதிக ரீச் ஆகியுள்ளது.

எனினும் தற்போது 4வது சீசனை ஒளிபரப்பி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அத்தோடு இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பாலா இடம்பெறவில்லை. 

கோமாளியாக இருந்த ஷிவாங்கி குக்காக மாறியுள்ளார். ஆனாலும் கடந்த சீசனில் அதிகமாக இடம்பெறாத புகழ், தற்போது 4வது சீசனில் முழுமையாக கோமாளியாக ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குக்காக மாறியபோதிலும் தன்னுடைய தங்கை ஷிவாங்கியுடன் இணைந்து மாஸ் காட்டி வருகிறார்.

சினிமாவிலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் புகழ் நடிப்பில் வெளியான நிலையில், தற்போது காசேதான் கடவுளடா படத்தில் ஷிவாங்கியுடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கண்ணீர் வரவழைக்கும் பதிவை பதிவிட்டுள்ளார்.அதாவது வடிவேல் பாலாஜியை மாதிரி வெளியிட்டு ..“என்னுள் என்றும் இருக்கும் உன்னை போல் நான் மாறிய தருணம்... உனக்காக நான் செய்யும் சின்ன அர்ப்பணிப்பு என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மாமா ❤️எப்போதுமே எனக்குள் நீ இருப்பாய் மாமா... மிஸ் யூ மாமா...💔 ” இவ்வறு பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் தமது கெமண்ட்களை பதிவிட்டுள்ளனர்.இதோ அந்த பதிவு..




Advertisement

Advertisement