• Jul 24 2025

புது கார் வாங்கிய 6 மாதத்தில் விபத்தில் சிக்கிய குக்வித்கோமாளி சக்தி- தற்போதைய நிலை என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பலர் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அந்த வரிசையில் ஒருவர் தான் சக்தி. இவர் ஒரு கோமாளியாக அடிக்கடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்.

தன்னால் முடிந்த அளவிற்கு பலரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்.குக்வித்கோமாளி ஷோவில் இவர் வருவது குறைந்து விட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல் வைத்து நடத்தி வருகிறார்.


இவர் அண்மையில் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். கார் வாங்கி இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை.இந்நிலையில் தற்போது அவர் சென்னை சென்ட்ரல் அருகில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி இருக்கிறார்.

சக்தி அவரது காரை ஓட்டிசென்ற போது ஒரு பேருந்து காரை உரசியபடி வந்து இடித்து இருக்கிறது. அதில் சக்தியின் தலையில் அடிபட்டு இருக்கிறது. இருப்பினும் ஹாஸ்பிட்டல் செல்லும் அளவுக்கு பெரிய காயம் இல்லை என அவர் கூறி இருக்கிறார்.

இருப்பினும் சக்தியின் புது கார் விபத்தில் பெரிய சேதம் ஆகி இருக்கிறது. அதனை அவரே லைவ் வீடியோவில் காட்டி இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement