• Jul 25 2025

8 வயதில் இருந்து தந்தையால் சித்திரவதை அனுபவித்த குஷ்பூ... வம்பு இழுத்த பிரபலம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கிய பங்கு குஷ்புவுக்கும் உண்டு. எனினும் சற்று குண்டாக இருந்தாலும் ரசிகர்கள் வைத்து தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி ஹீரோயின்களுக்கு முதல் முதலில் கோயில் கட்டியது என்றால் அதுவும் குஷ்புக்கு தான்.

இவ்வாறுஇருக்கையில் சினிமாவில் நிறைய அட்ஜஸ்ட்மென்ட் நடப்பதாக நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அது மட்டும் இன்றி சினிமாவில் தான் இந்த விஷயம் அதிகம் நடப்பதாகவும் சில நடிகைகள் கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையால் சித்திரவதை அனுபவித்ததாக குஷ்பூ கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அதாவது தான் 8 வயது இருக்கும்போதே தந்தையால் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும், இதனை எப்படி அம்மாவிடம் சொல்வது என்ற தயங்கினேன் என்றும் குஷ்பூ நினைத்தாராம். தொடர்ந்து இதுபோன்று பிரச்சனையை சந்தித்த குஷ்பு 15 வது வயதில் அவருடைய அம்மாவிடம் இதைப் பற்றி  தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் 16 வது வயதில் அவருடைய தந்தை தனது குடும்பத்தை விட்டு சென்றதாக சொல்லி இருந்தார். எனினும் இதைப் பற்றி சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் இப்படி பேச மாட்டார்கள் என்றும், குஷ்பூ முஸ்லிம் அதனால் தான் இப்படி சொல்லி உள்ளார் என தெரிவித்துள்ளார்.

அதாவது இஸ்லாம் முறைப்படி அவர்களது உறவு முறை வேறு. அத்தோடு குஷ்புவின் அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம், அவரால் குஷ்பூ பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுமட்டுமின்றி இப்போது நடிகைகள் பப்ளிசிட்டிக்காக இது போன்று பேசி வருவதாக பயில்வான் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அத்தோடு  சும்மா இருந்த சங்கை ஊதி கிடைத்தது போல குஷ்பூ விஷயத்தில் தேவை இல்லாமல் வாய் விட்டு பயில்வான் மாட்டிக்கொண்டு உள்ளார். ஏற்கனவே பல நடிகைகளை பற்றி பேசி பயில்வான் சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதற்கும் குஷ்பூ சரியான பதிலடி கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Advertisement

Advertisement