• Jul 23 2025

''குட்டிம்மா சாரிடா செல்லம்'' - விஜய்யை கொஞ்சிய மிஷ்கின்..! ஓஹோ இதான் விஷயமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில பேட்ச் வேலைகளே மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநர்களின் மாநாடுதான் நடக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் மட்டுமில்லாமல் ஹாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்தில் விஜய் தனது சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ள விஜய், இருவேறு கெட்டப்புகளில் காணப்படுகிறார். சமீபத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

இதனிடையே படம் குறித்து தொடர்ந்து பல விஷயங்களை இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், லியோ படத்தில் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தான் ஒரு குட்டி வில்லன் என்று முன்னதாக ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சூட்டிங்கின்போது ஒரு சண்டைக்காட்சியில் தான் விஜய்யின் தலையில் தெரியாமல் அடித்துவிட்டதாகவும் உடனடியாக பதறி, குட்டிம்மா சாரிடா செல்லம் என்று தான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தற்போது பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சண்டைக்காட்சியின்போது இதேபோல தன்னுடைய தலையில் விஜய் அடித்துவிட்டதாகவும் உடனடியாக பதறிய விஜய் தன்னிடம் சாரி கேட்டதாகவும் அதற்கு தான் பரவாயில்லை செல்லக்குட்டி என்று கூறியதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement