• Sep 09 2025

தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித் போல் போஸ் கொடுத்த குட்டி தல...வைரல் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்துக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஆத்விக்-கை தான் அஜித் ரசிகர்கள் குட்டி தல என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது தந்தையை போலவே தலையில் ஹெல்மெட் அணிந்து ஆத்விக் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

அதுவும் தனது தந்தையிடம் இணைந்து இந்த புகைப்படத்தை ஆத்விக் எடுத்துள்ளார். இது சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட  புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement