• Jul 25 2025

நான் உயிரோட தான் இருக்கேன்... ஏன் இப்படி பண்ணினாங்க என்று தெரியல... மன வருத்தத்தில் லக்‌ஷ்மி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1961-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளியான 'ஸ்ரீவள்ளி' என்ற திரைப்படத்தில் குழந்தை வள்ளியாக நடித்து அறிமுகமானவரே நடிகை லக்‌ஷ்மி.


இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருகின்றார். வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி வந்தால் இவருக்கு 70 வயது நிறைவடையும்.


இந்நிலையில் பழம்பெரும் நடிகை லக்‌ஷ்மி திடீரென காலமாகி விட்டதாக செய்திகள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் ஆகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் இது தொடர்பாக நடிகை லக்‌ஷ்மிக்கே போன் போட்டு கேட்டு அது முற்றிலும் வதந்தி என்பதை அறிந்து கொண்டனர்.


இந்த வதந்தி குறித்து லக்‌ஷ்மியிடமே போன் செய்து விசாரித்த நிலையில் அவர் கூறுகையில் "நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்ப்பா.. பிறந்து விட்டால் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும். மரணத்திற்காக எல்லாம் நான் எப்போதும் பயந்தது கிடையாது. யாரு இப்படி வேலை வெட்டி இல்லாமல் இந்த வதந்தியை கிளப்பி விட்டது என தெரியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.


மேலும் "எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு பதறி போய் போன் போட்டு காலையில் இருந்தே ஏகப்பட்ட மீடியா நண்பர்களும் திரையுலக நண்பர்களும் விசாரித்து வருகின்றனர். லக்‌ஷ்மி மீது அக்கறை கொண்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்காங்க என்பதை நினைக்கும் போது ரொம்பவே மனசுக்கு சந்தோஷமாக இருக்கு" என்றார் நடிகை லக்ஷ்மி.

Advertisement

Advertisement