• Jul 24 2025

மறைந்த நடிகர் மனோபாலாவின் மகன் விடுத்த கோரிக்கை...வெளியானது அவரின் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவர் இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற படத்தில் துணை இயக்குநராக அறிமுகமாகி இப்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டி கவனிக்கப்படும் பிரபலமாக இருப்பவர் மனோபாலா. 

69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார்.

மேலும்  அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது, பின் திரைப்பணிகளை கவனித்து வந்த மனோபாலாவிற்கு கடந்த 15 நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார், வீட்டிலேயே சிகிச்சையும் பெற்றிருக்கிறார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.மனோபாலா மறைவிற்கு பின்னர்  அவரது குடும்ப புகைப்படம்  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அவரது மகனும் அப்பாவின் இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என்றும், உங்களை அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும். எங்களுக்கு கொஞ்சம் இந்த நாட்களை கடந்து செல்ல உதவி செய்யுங்கள் என பத்திரிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.





Advertisement

Advertisement