• Jul 24 2025

மறைந்த நடிகை ஜெயலலிதாவுக்கு விஜய்யை பிடிக்காதா?- இதற்கு காரணம் பிரியாணியா?- யாரும் அறிந்திடாத ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் . இவர் தற்பொழுது வாரி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய் குறித்த புதிய தகவல் ஒன்று வைரலாக வருகின்றது. அதாவது விஜய்யை நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயலலிதா அவர்கள் வெறுக்க  காரணமாய் அமைந்தது ஒரு பிரியாணி விருந்துதானாம். 


ஒருமுறை சென்ட்ரல் ஜெயிலில் உள்ள சிறைக் கைதிகள் அனைவரும் மட்டன் பிரியாணி விருந்து கேட்டுள்ளனர். அப்பொழுது போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருந்த ஜி இராமச்சந்திரனிடம் அவர்களது ஆசையை முன்வைத்துள்ளனர்.

சிறையில் உள்ள மொத்த கைதிகள் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி கொடுப்பது என்பது இயலாத காரியம். இதனால் அப்பொழுது காவல் அதிகாரி, ஜி ராமச்சந்திரன் அவர்கள் விஜய்யின் தந்தையாகிய எஸ் ஏ சந்திரசேகரிடம் இதை முறையிட்டு உதவி கேட்டிருக்கிறார்.இதனை கேட்டு எஸ் ஏ சந்திரசேகரும் அவர்களும், கைதிகளுக்கு விருந்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். 

அந்த விருந்து தினத்தில் கைதிகளுக்கு விஜய்யும் அவரது அப்பாவும் ஜெயிலில் சென்று பிரியாணி பரிமாறியுள்ளனர்.அப்பொழுது மேடையில் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஜி ராமச்சந்திரன், விஜய்யின் குணங்களை பார்த்தால் அப்படியே அவர் எம்ஜிஆர் போல் இருக்கிறார், அவரிடம் புரட்சித்தலைவர் பண்பு அப்படியே இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டார். 


இது அடுத்த நாள் எல்லா பத்திரிகையிலும் தலைப்பு செய்தியாக வந்து விட்டது. இதனைக் கண்டு உச்சகட்ட கான்டாகினார் செல்வி ஜெயலலிதா. அப்பொழுது பொறுப்பில் இருந்த அவர் அந்த அதிகாரியை டிரான்ஸ்பர் என்ற முறையில் தண்டித்தார். அதிலிருந்து ஜெயலலிதாவிற்கு விஜய்யை பிடிப்பது இல்லை என்றும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement