• Jul 25 2025

அச்சு அசல் ஆலியாவைப் போலவே மாறி வரும் அவரின் மகள்... வெளியான லேட்டஸ் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையைப் பொறுத்தவரையில் இப்போது ஏராளமான நடிகர்கள், நடிகைகள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் வரும்போது இதற்கு முன் நடித்து வந்த நடிகர்களை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள்.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். 


இவர்கள் இருவரும் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து பலரின் மனங்களைக் கொள்ளை கொண்டு நிஜ வாழ்க்கையிலும் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு தற்போது ரியல் ஜோடியாகி விட்டனர்.

மேலும் திருமணத்தை தொடர்ந்து புது வீடு வாங்கியும் குடியேறிய இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இவர் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வந்தனர்.


இந்நிலையில் ஆலியா தற்போது தனது மகளான அயிலா பாப்பாவின் லேட்டஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "உங்கள் மகள் அச்சு அசலாக உங்களைப் போலவே இருக்கின்றார், எப்போதுமே துரு துரு எனவும் காணப்படுகின்றார்" எனக் கூறி வருகின்றனர். 



Advertisement

Advertisement