• Jul 25 2025

கற்றல் விதி இருக்கலாம், ஆனால் கற்றல் வதை இருக்க கூடாது- ஜோவிகா மற்றும் விசித்திராவுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்கள் அடிக்கடி தமக்குள் மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம்  விசித்ரா மற்றும் வனிதா மகள் ஜோவிகா இடையே தான் உச்சகட்ட சண்டை நடந்தது. படிப்பு பற்றி விசித்ரா கூறிய அட்வைஸ் பிடிக்காமல் ஜோவிகா அவரிடம் சண்டை போட்டார். படிப்பு எல்லாம் முக்கியமே இல்லை, படிக்காமல் கூட பிடித்ததை செய்வேன் என ஜோவிகா கூறினார்.

இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல் இந்த பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். 'விசித்ராவின் நோக்கம் தப்பு அல்ல. இது generation இடைவெளி" என ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்திருகிறார்.

"கற்றல் விதி இருக்கலாம், ஆனால் கற்றல் வதை இருக்க கூடாது" எனவும் கமல் கூறி இருக்கிறார். இதனால் இந்தப் ப்ரோமோ ரசிகர்களைக் கவர்ந்த வருவதைக் காணலாம். 



Advertisement

Advertisement