• Jul 25 2025

அவளை சும்மா விடுங்க ராபர்ட் மாஸ்டரால் கொந்தளிக்கும் குடும்பத்தினர்- பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ரச்சிதாவின் கணவர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்புக்கு குறைவில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.தில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றி வந்த நிலையில் தற்பொழுது 5 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் இதில் போட்டியாளராகப் பங்கு கொண்டிருப்பவர்கள் தான் நடன மாஸ்டர் ராபர்ட் மற்றும் சின்னத்திரை நடிகை ரச்சிதா. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நாளிலிருந்து ரச்சிதாவை சைட் அடித்து வருகின்றார் ராபர்ட் மாஸ்டர்.


தொடர்ந்து ரச்சிதாவிடம் முத்தம் கேட்பது, காதலிப்பது போன்று நடி என்று கூறுவது, கட்டிப்பிடிப்பது போல செல்வது என இருந்து வருகிறார். கமல்ஹாசன் முன்னிலையிலேயே ரச்சிதாவிடம் ப்ரபோஸ் பண்ண முயற்சி செய்தார் ராபர்ட் மாஸ்டர். ஆனால் கமல்ஹாசன் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

சக போட்டியாளர்கள் ரச்சிதாவிடம் பேசினால் கூட கோபப்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இவரின் நடவடிக்கைகளை புரிந்து கொண்ட ரச்சிதா கிளிப்பிள்ளைக்கு கூறுவது போல் அறிவுரை கூறினார்.ஆனாலும் அவர் திருந்தவில்லை . ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் முறையை பார்த்து அவரது கணவர், மாமியார் மற்றும் குடும்பத்தினர் கொந்தளித்து போயுள்ளதாக தகவல் வெளியானது.


இந்நிலையில் நடிகை ரச்சிதாவின் கணவரான சீரியல் நடிகர் தினேஷ், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து கடுப்பில் உள்ள தினேஷ், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வைல்டு கார்ட் என்ட்ரியாக செல்லவுள்ளாரா அல்லது உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் டாஸ்க்கில் செல்வாரா என்பது குறித்த தகவல் இல்லை. ரச்சிதாவும் தினேஷும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement