• Jul 25 2025

ஆட்டோ தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை மகிழ்ச்சியாக்கிய 'லெஜண்ட் சரவணன்'

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஆட்டோ தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை மகிழ்ச்சியாக்கிய 'லெஜண்ட் சரவணன்'. தனது சொந்த வாழ்க்கையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் வெற்றி பெற்று காட்டியவர் தான் சரவணன் அருள்.

பிரபல சரவணன் ஸ்டோர் உரிமையாளரான இவருக்கு பல கோடிகள் சொத்து இருந்தாலும், அவருக்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்துள்ளது.


அண்மையில் இவருடைய நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான 'தி லெஜண்ட்' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். எனினும், படம் தொடர்பில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.


இந்த நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு தொழிலாளர்களை சந்தித்து அவர்களை சந்தோசப்படுத்தியுள்ளார் சரவணன் அருள்.

இதன் போது, அங்கிருந்த ஆட்டோ  தொழிலாளி ஒருவர் 'நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஆட்டோ வேண்டும்' என கேக்க, 'ஓகே.. ஆனா நான் தான் ஆட்டோ ஓட்டுவேன்'  என்று ஆட்டோ ஓட்டியுள்ளார். குறித்த காணொளி தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பித்தக்கது.

Advertisement

Advertisement