• Jul 25 2025

பழம்பெரும் நடிகர் கே.விஸ்வநாத் மறைவு..!- அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளதோடு இயக்குநராகவும் வலம் வந்தவர் தான் கே. விஸ்வநாத்

இவர் இயற்றிய சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படமாகும்.


நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக தன்னுடைய 93 ஆம் வயதில் கே. விஸ்வநாத் காலமானார். அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement