• Jul 23 2025

லியோவில் தளபதி சிங்கமில்ல பூனை! மியோவ்..மியோவென வச்சி செய்யும் தல ரசிகர்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் 3.50க்கு லியோ படத்தின் முதல் காட்சி பெருமளவில் திரையிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம்      lcu இல்  இணைந்துள்ளது. 

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 



இந்த நிலையில், நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரும், விஜய்யின் தீவிர ஹேட்டருமான மனோபாலா விஜயபாலன் 'இது லியோ படம் இல்லை மியோவ்' என தனது விமர்சனத்தை கொடுத்து விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளார்.

மேலும், 'தேவையற்ற' பரபரப்புகளால் உருவாக்கப்பட்ட 'எதிர்பார்ப்புகளை லியோ பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. சிங்கமாக இல்லாமல் படம் 'பூனை'யாக மாறியது' என டிரேட் அனலிஸ்ட் மனோபாலா விஜயபாலன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனினும் , அனிருத் மீண்டும் ஒருமுறை தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். லோகேஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் படமாக லியோ இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement