• Jul 24 2025

லியோ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்- படம் வெளியாகிய 5 நாட்களில் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

 படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லை என பெரும்பாலான விமர்சனங்கள் வந்தன. இதனால் லியோ படத்தின் வசூல் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.


ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. இப்படத்திற்கு விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும், ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால், லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. 

முதல் 4 நாட்களில் 405 கோடி வசூல் ஈட்டிய இத்திரைப்படம் 5வது நாளான நேற்று அதிகப்படியாக 70 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும் ஒட்டுமொத்தமாக 475 கோடி வசூலை லியோ வசூலித்து 500 கோடி கிளப்பில் இன்றைய வசூலுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்றைய வசூலுடன் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வாழ்நாள் வசூலை லியோ முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் வசூல் விவரத்தை இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement