• Jul 26 2025

வரலாற்று சாதனை படைக்க போகும் லியோ திரைப்பட டிரைலர்_ தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட புதிய அப்டேட்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!




விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.



இந்நிலையில், லியோ படத்தின்  இசை வெளியீட்டு விழாவை, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. ‘பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டை நடத்தவில்லை’ என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்திருந்தது.


இதையடுத்து லியோ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நடிகை த்ரிஷாவின் புகைப்படம் தாங்கிய லியோ போஸ்டரை வெளியிட்டிருக்கின்றார்கள். இதனை பார்த்து ரசிகர்கள் எக்கசக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறார். 

Advertisement

Advertisement