• Jul 26 2025

நடிகை திரிஷாக்கு பர்த்டே கிஃப்ட் கொடுத்த லியோ டீம்..தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து பிரத்யேகமான ஒரு ஸ்டில்லை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என 4 படங்களில் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை த்ரிஷா 5வது முறையாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இணைந்துள்ளார்.14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் ஹேப்பியான தருணம் எனக் கூறியிருந்த நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். லியோ படக்குழுவினர் உடனும் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டான நிலையில், த்ரிஷா பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு சூப்பரான போட்டோ ஒன்றை பரிசாக வெளியிட்டுள்ளது.

 லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வரும் த்ரிஷா அவருடன் பேக்கரி ஒன்றில் இருக்கும் லியோ படத்தின் பிரத்யேக ஸ்டில்லை தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.நடிகை த்ரிஷாவும் இப்படியொரு லைஃப் டைம் கிஃப்ட் கிடைத்ததற்காக லியோ தயாரிப்பு நிறுவனத்துக்கும் லியோ படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement