• Jul 24 2025

கர்நாடகாவில்" லியோ" திரையிடப்படாது.... விஜய் குரலில் வெளியான ஆடியோ... உண்மையை உடைத்த விஜய் மக்கள் கட்சி செயலாளர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் லியோ திரைக்கு வெளிவருவதற்கு முன்பே பல சிக்கல்களை சந்திக்கிறது. அந்த வகையில் லியோ ஆடியோ லஞ்ச் நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது , தற்போது விஜய் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி போடுமாறு கூறி ரசிகர்கள் இன்று கள்ளக்குறிச்சில் திரையரங்கை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் தற்போது நடிகர் விஜய் குரலில் போலியான  ஆடியோ ஒன்று ரிலீஸ் ஆகி உள்ளது.

அந்த ஆடியோவில் "லியோ திரைப்படம்  கார்நாடகாவில் திரையிடப்படாது , 2026 ல் கர்நாடகா மிக பெரிய விளைவை சந்திக்கும் , சித்தார்த் நடித்த "சித்தா ' திரைப்படத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்ததற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன் " என்று நடிகர் விஜய் குரலில் சொல்வது போல ஒரு ஆடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகியுள்ளது. இது குறித்து விஜய் ரசிகர் மன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் குரலில் வெளிவந்துள்ள ஆடியோ அவரது குரல் இல்லை , அவருக்கும் இந்த ஆடியோக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸீ ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆடியோ விஜய் குரலில் பேசியதாக தவறாக இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் மீது தவறான கருத்தை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். 

       

Advertisement

Advertisement