• Jul 26 2025

“மதநம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்துபோகட்டும்”- சுரேஸ்கோபி சர்ச்சைப்பேச்சு! விசாரணை நடத்தும் பொலிசார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி மத நம்பிக்கை இல்லாதவர்களை குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் இருந்தார். இவர் கேரளாவில் மகா சிவராத்திரியை யொட்டி நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, மத நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவேன் என்று பேசினார். 


சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதில் கேரளாவில் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.


 புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் சுரேஷ் கோபி மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். இது தவிர பாடகராகவும் இருக்கும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement