• Jul 26 2025

தில் இருந்தா அதை மட்டும் பண்ணு பார்ப்போம்: ரவீந்தருக்கு வனிதா விட்ட சவால்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் பணத்திற்காக மஹாலட்சுமி அவரை கட்டிக்கிட்டார் என சொல்வது தவறு என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.

 

ரவீந்தர், மகாலட்சுமி பற்றி வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில்  தெரிவித்ததாவது.., 

எல்லாமே பப்ளிசிட்டி. ரவீந்தர் நல்ல மனிதர். அவருடைய சேனலுக்காக பேட்டி கேட்டார். நான் பணம் வாங்காமல் வர மாட்டேன் என்று கூறினேன். பணம் கொடுத்து கூப்பிட்டார். நான் சென்றேன். அந்த பேட்டியின் ப்ரொமோவுக்கு வந்த கமெண்ட்டை பார்த்தே அந்த பேட்டியை  அப்படியே தூக்கிட்டார். தில் இருந்தால், தைரியம் இருந்தால் ரவி, இப்போ அந்த பேட்டியை போடு தம்பி என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.



நானும், ரவியும் நிறைய பேசினோம். அவருக்கு என் வாழ்த்துக்கள். மகாலட்சுமிக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் வாழ்க்கையில் தவறு செய்கிறோம். அவரிடம் அந்த பொண்ணு கண்டிப்பாக ஏதோ ஒரு விஷயம் பார்த்திருக்கணும். இல்லை என்றால் இப்படி ஒரு முடிவை அந்த பொண்ணு எடுத்திருக்க மாட்டார் என வனிதா விஜயகுமார்  தெரிவித்தார்.அத்தோடு அந்த பெண் அழகாக இருக்கிறார்.அவரை முதல் எனக்கு தெரியாது.தற்போது வெளியான வீடியோக்கள் மூலம் தான் தெரியும்.



ரவி வந்து உ..ன்னா ஊ ஊன்னு பேசுபவர். அந்த பொண்ணு பாவம், . பணத்துக்காக கல்யாணம் பண்ணுறதுனு சொல்வது தப்பான விஷயம். தயாரிப்பாளர்களிடம் பணம் கிடையாது என்று வனிதா கூறினார். ரவீந்தர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் தான் இப்படி பணம் பற்றி பேசுகிறார்கள் என மகாலட்சுமி கூட குறிப்பிட்டார்.






ரவியும், அந்த பொண்ணும் நல்லா இருக்கணும். அவர்களிடம் கேட்கக் கூடாத கேள்விகள் எல்லாம் கேட்கிறார்கள். physical பற்றி கேட்ட கேள்விக்கு கூட ரவி பதிலளித்தார். நான் திருமணத்தை மதிக்கிறேன். வாழ்க்கைத் துணை கண்டிப்பாக தேவை என்கிறார் வனிதா விஜயகுமார்.

Advertisement

Advertisement