• Jul 25 2025

என்ன நடந்தாலும் நடக்கட்டும் பார்த்துக்கலாம்- சமந்தாவின் திடீர் மாற்றம்- வாழ்த்துத் தெரிவிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகை சமந்தா, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது சகுந்தலம் திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து ஓரளவு மீண்டு வந்திருக்கும் சமந்தா நடித்திருக்கும் இந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


தற்போது சமந்தா அளித்து வரும் பேட்டிகளில் அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் அடிக்கடி பேசி வருகிறார்.சகுந்தலம் படம் நடிக்க தொடங்கி இரண்டு வருடம் ஆகிறது, அனுபவம் எப்படி இருக்கிறது என ஒரு ரசிகர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு சமந்தா பதில் அளித்து இருக்கிறார்.


"அதிக விஷயங்கள் நடந்துவிட்டது. நான் கற்பனை கூட செய்யாத விஷயங்கள். என் வாழ்க்கைக்கு பெரிய பாடங்கள் இவை. எது வந்தாலும் பாத்துக்கலாம் என்கிற மனநிலை தற்போது எனக்கு வந்துவிட்டது" என சமந்தா கூறி இருக்கிறார். சமந்தாவின் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement