• Jul 25 2025

அனைத்து ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் லைகர் படத்தின் வசூல்- அதிகாரப்பூர்வ Boxoffice ரிப்போர்ட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபல்யமான நடிகர் தான் விஜய்தேவர் கொண்டா. இப்படங்களைத் தவிர பல தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் நோட்டா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் நேற்றைய தினம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் லைகர். 

இப்படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார்.

Puri connects மற்றும் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.இப்படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.



லைகர் படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் படம் மோசமாக இருப்பதாகவே கூறிஇருந்தனர். அதனால் படத்தை இணையத்தில் மோசமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இத்தனை ட்ரோல்களை தாண்டி லைகர் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 33.12 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.



Advertisement

Advertisement