• Jul 25 2025

அஸ்வினை போல் வாயை விட்டு சர்ச்சையில் சிக்கிய சூரி..நடந்தது என்ன.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஷோவான விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பேமஸ் ஆன அஸ்வின், அதன் பின்னர் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது 40 கதையை கேட்டு தூங்கிவிட்டேன் என ஓவர் திமிரு காட்டியதால் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

எனினும் இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிரச்சனை அடங்கிய பாடில்லை. அதனால் சில மாதம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அஸ்வின், சமீபத்தில் வெளியான செம்பி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்படி இருக்கும் சூழலில் அஸ்வினை போல் தற்போது ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் சூரி வாயை விட்டு மாட்டிக் கொண்டார்.

முன்பு காமெடியனாக இருக்கும்போது சைலன்ட் ஆக இருந்த சூரி இப்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் டாப் செலிப்ரிட்டியாகவே மாறிவிட்டார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ‘பல வருடங்களாக நகைச்சுவை நடிகராக இருந்திருக்கிறேன். ஆனால் நான் ஹீரோவாக நடிக்க நினைத்திருந்தால், இதுவரை 10 படங்களில் நடித்திருப்பேன்.

அத்தோடு காமெடியனாக பிசியாக இருந்த போது கதாநாயகனாக நடிப்பதற்காக நிறைய கதைகள் தன்னைத் தேடி வந்தது. இருப்பினும் அதில் நடிக்க தனக்கு உடன்பாடும் இல்லை. ஆனால் நகைச்சுவை நடிகராக இல்லாமல் ஒரு கேரக்டராக நடிக்க வேண்டுமெ ன்ற ஆசை நீண்ட நாளாகவே இருந்தது.

காமெடியன் சூரி என்பதைத் தாண்டி குணச்சித்திர கேரக்டர் எனக்குள் இருப்பதை சரியான சமயத்தில் வெளிக்காட்ட காத்திருந்தேன்.அத்தோடு பெரிய பெரிய இயக்குனர்கள் சிலரும் காமெடி பட கதாநாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இருந்தாலும் டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாகவே நடித்துக் கொண்டிருப்பதால் அதை முழு நீள படங்களில் நடிப்பதில் கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது.

அதனால் தான் இதுவரை கதாநாயகனாக தன்னை தேடி வந்த படங்களை எல்லாம் வேண்டாம் என கூறிவிட்டேன். ஆனால் விடுதலைப் படத்தில் குமரேசன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததன் மூலம் எனக்குள் இருக்கும் நடிகனை கண்டுபிடித்த வெற்றிமாறனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

எனினும் இதே போன்று தான் சில வருடங்களுக்கு முன் அஸ்வினும் வெளிப்படையாக பேசி மாட்டிக் கொண்டார். இப்போது அவரைப் போலவே 10 பட வாய்ப்பு வேண்டாம் என உதறினேன் என்று சொல்லி, மாட்டிக்கிட்டியே பங்கு என சூரியை நெட்டிசன்கள் பங்கம் செய்கின்றனர்.

Advertisement

Advertisement