• Jul 25 2025

ரஜினியை போலவே மாப்பிள்ளை தேடிய ரசிகை.. சுவாரசியம் பகிர்ந்த பிரபல நிறுவனம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான படம் எஜமான். இப்படத்தில் மீனா, ஐஷ்வர்யா, நெப்போலியன், மனோரம்மா, கவுண்டமணி, செந்தில், உதயகுமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.

 ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் எஜமான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள கடிதம் ஒன்று இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

1993ம் ஆண்டு ரசிகை ஒருவர் எஜமான் படத்தை பார்த்துவிட்டு அதில் வரும் ரஜினியின் வானவராயன் கதாப்பாத்திரத்தை போன்று மாப்பிள்ளை தேடிவருவதாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்த கடித்தத்தை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த விடயம் தற்போது செம வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement