• Jul 25 2025

லிப்லாக் முத்தம்... படுக்கையறை காட்சினு எல்லைமீறிப்போகும் விஜய் டிவி சீரியல்... கடுங்கோபத்தில் நெட்டிசன்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தொலைக்காட்சி சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதால், புதுபுது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன. முதலில் சீரியல் என்றாலே சன் டிவி என சொல்லும் அளவுக்கு அதில் ஏராளமான சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளும் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது 6 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு தான். சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டு வருவதாகவும் சமீப காலமாக விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போது சினிமாவையே மிஞ்சும் வகையில் சீரியலில் லிப்லாக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று உள்ளது ரசிகர்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபமான சீரியல்களில் ஈரமான ரோஜாவே சீரியலும் ஒன்று. இதன் முதல் சீசனுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. மதிய வேளையில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் தான் லிப்லாக் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதோடு பேசுபொருளாகவும் மாறி உள்ளது.

ஈரமான ரோஜாவே சீரியலில் தனது அம்மாவின் அனுமதியின்று ஜேகேவை திருமணம் செய்துகொள்ளும் ரேகாவுக்கு முதலிரவு நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சீரியல்களில் முதலிரவு காட்சிகள் இடம்பெறாது. ஆனால் இந்த சீரியலில் இருவரும் முத்தம் கொடுத்து கொள்வதும், படுக்கையறையில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அது இல்லத்தரசிகள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement