• Jul 24 2025

நடிகருடன் லிவிங் டூகெதர்?!..தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்- த்ரிஷாவின் திருமணம் நின்று போனதற்கு காரணம் இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கனவு கன்னியாக தற்போது வரை ஒரு மாஸ் ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.இவரின் திருமண நிச்சயதார்த்தத்தை பற்றிய ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. வயதாகியும் இன்னும் த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கவில்லையே ?அவரை வைத்து அவருடைய அம்மா பணம் சம்பாதிக்கிறார் என்று அப்போதைய ஊடகங்களில் பல செய்திகள் வரத் தொடங்கியது.

இதனால் கடும் கோபம் கொண்ட அவருடைய அம்மா திடீரென ஒரு பத்திரிக்கை கூட்டம் நடத்தி அதில், தான் அந்த மாதிரி இல்லை என்பதை ஒரு வாக்குவாதமாகவே மாற்றி அதில் இருந்து பிரபல தொழிலதிபர் ஒருவரை த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்ன மாதிரியே பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை த்ரிஷாவிற்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த நிச்சயதார்த்தம் பாதியிலேயே நின்று போனது .


அதற்கு காரணம் பெரியோர்களாகிய நாங்கள் தான் என்றும் பத்திரிகைகளில் பேட்டியளித்தார்கள் இருவரின் குடும்பத்தார்களும்.த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதை அடுத்து அவருக்கு சில காலம் படங்களின் வாய்ப்பு இல்லாமல் இருந்தன. அந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக செய்தி வெளியானது.


 மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு சில படங்களில் த்ரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு வந்தது .அந்த ஒரு நடிகருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது வெளியே தெரிய வர தெலுங்கு சினிமாவே த்ரிஷாவை இனி இங்கு அவர் நடிக்க வரக்கூடாது என அவரை விரட்டி அடித்தது.அதுமட்டுமில்லாமல் கன்னட சினிமா உலகமும் த்ரிஷாவை விரட்டி அடித்தது. ஆனாலும் தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.


Advertisement

Advertisement